வைத்தியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!!
கொழும்பு, மார்ச் 4: எதிர்காலத்தில் அரச வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அடிப்படைச் சம்பளம், மேலதிக சேவைக்கான கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த சம்பள உயர்வு, PAYE வரி நிவாரணம் போன்ற பல்வேறு அம்சங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் சில கொடுப்பனவுகள் துண்டிக்கப்பட்டதால் மார்ச் 5ஆம் தேதி நாட்டை முழுவதும் வேலைநிறுத்தம் நடத்துவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இதனால் அரச வைத்திய சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
🔴 தொடர்புடைய செய்தி:
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.40,000 ஆக உயர்வு!
Srilanka Tamil News
0 Comments