யாழில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சொக்லேட்களை வைத்திருந்த நபர் கைது!!
யாழ். மானிப்பாய் பகுதியில், சட்டவிரோதமாக சீன சொக்லேட் வகைகள் விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பிறகு எடுக்கப்பட்டது.
சுகாதார அதிகாரிகள், அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகள், ஊசி மற்றும் சைனேட் குப்பி வடிவங்களில் இருந்தது கண்டறிந்தனர். அத்துடன், பொருட்கள் உரிய சுட்டு துண்டுகள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதைக் காணப்பட்டதால், கடை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நேற்றைய தினம், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில், கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், மல்லாகம் நீதவான் கடுமையாக எச்சரிக்கை வழங்கி, 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.
Srilanka Tamil News
0 Comments