Ticker

10/recent/ticker-posts

இராணுவப் புலனாய்வுத்துறைக்குள் பாரிய மாற்றங்கள்! பலருக்கும் இடமாற்றம்!!

 இராணுவப் புலனாய்வுத்துறைக்குள் பாரிய மாற்றங்கள்! பலருக்கும் இடமாற்றம்!!

கொழும்பு: இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையில் சமீபத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, முக்கிய பதவிகளில் இருந்த அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, சிலர் முக்கிய பொறுப்புகள் இன்றி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய மாற்றங்கள்:


பிரிகேடியர் புத்திக மஹதன்தில – இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, எந்த புதிய பொறுப்பும் வழங்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளார்.


பிரிகேடியர் பிரபோத சிரிவர்த்தன – இராணுவப் புலனாய்வுத் துறையிலிருந்து ராணுவ பேண்ட் வாத்திய குழுவின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.


பிரிகேடியர் ஷிரான் அமித் – புனர்வாழ்வு செயற்பாட்டுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.


பிரிகேடியர் பிரியலால் – அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பிரிகேடியர் குமார் – இராணுவ புலனாய்வுத் துறையிலிருந்து நீக்கப்பட்டு, இராணுவ தலைமையக செயற்திட்டப் பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளார்.


பிரிகேடியர் நுவன் அபேசேகர – இசுருபாய செயற்திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிரேஷ்ட கேணல் தரத்தில் இருந்த அதிகாரிகள் பலர் புலனாய்வுப் பணிகளிலிருந்து மற்ற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


கேணல் சேனக முதுகுமாரண – கொத்தலாவலை பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றம்.


கேணல் கெளும் மத்துமகே – பொறுப்புகள் இன்றி மாற்றம்.


கேணல் முஹம்மத் அன்சார் – புத்தளைக்கு இடமாற்றம்.


கேணல் புளத்வத்த – முல்லைத்தீவுக்கு மாற்றம்.


கேணல் சாகர கொஸ்தா – கிளிநொச்சிக்கு மாற்றம்.


கேணல் ஜயந்த ஷெல்டன் – ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்.


கேணல் முஹம்மத் இக்ராம் – ராணுவ ஆய்வுப் பிரிவிற்கு மாற்றம்.

இந்த பாரிய மாற்றங்கள், இராணுவப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளில் பெரிய தடங்கல்களை ஏற்படுத்தும் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு துறையில் அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களின் தாக்கம், நாட்டின் பாதுகாப்பு நிலைமையை எப்படி பாதிக்கும் என்பதையும் கவனிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இந்த மாற்றங்கள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு நிலையை எந்தளவிற்கு பாதிக்கும்? புதிய நிர்வாக மாற்றங்கள் சரியானதா? இது பாதுகாப்புத் துறையில் ஒருவித பழிவாங்கும் அரசியலா? – என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments