Ticker

10/recent/ticker-posts

மட்டக்களப்பு சந்திவெளி துப்பாக்கிச் சூடு: நால்வருக்கு மரண தண்டனை!!!

 மட்டக்களப்பு சந்திவெளி துப்பாக்கிச் சூடு: நால்வருக்கு மரண தண்டனை!!!

மட்டக்களப்பு சந்திவெளியில் 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 மார்ச் 18ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது, அந்த பகுதியில் செயல்பட்ட ஆயுதக் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலாக விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக, சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி. கிருஸ்ணரூபன், வ. திருச்செல்வம், கு. பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய நால்வரும் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2025 மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) அன்று, மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த நால்வரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு, நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments