யாழில் வீதியால் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (5) காலை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் பெண்ணொருவரிடம் இருந்து தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் செயல்படும் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர், சாவகச்சேரி பகுதியில் இருந்து ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் அபகரிக்கப்பட்ட தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருவரை கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.
கைதான நபரை நாளை (6) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்கள் இவ்வாறான சம்பவங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments