Ticker

10/recent/ticker-posts

பலூன் தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்!!

பலூன் தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்!!

காலி, நெலுவ: பலூனை ஊதி, பின்னர் வாய்க்குள் வைத்தவுடன் தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறிய 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் அண்மையில் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணமடைந்த சிறுவன் கரியவாசம் திரான கமகே என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்த சிறுவனின் தாயார், "மகன் பலூனில் காற்றை ஊதி விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர், அதில் இருந்த காற்றை வெளியேற்றுவதற்காக வாய்க்குள் வைத்தான். திடீரென அது தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சு முட்டியது. உடனடியாக நெலுவ கிராமப்புற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு மருத்துவர்கள் அவரது தொண்டையில் சிக்கிய பலூனை அகற்றியபோதும், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்," என்று உருக்கமாக கூறினார்.


இந்த துயர சம்பவம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை பராமரிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகின்றது. பலூன் போன்ற பொருட்கள் குழந்தைகளுக்கு ஆபத்தாக அமையலாம் என்பதால், அவர்களை கவனமாக கண்காணிப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிகுந்த அவசியமாகிறது.


- Srilanka Tamil News



Post a Comment

0 Comments