Ticker

10/recent/ticker-posts

திருகோணமலையில் செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலையில் செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியில் உள்ள செப்புக்கம்பியை திருட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் 2025 மார்ச் 13, வியாழக்கிழமை அதிகாலை திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள மக்கெய்சர் விளையாட்டரங்கின் அருகே இடம்பெற்றுள்ளது.


அந்த நபர் மின்பிறப்பாக்கியின் புவித்தொடுப்பு வயரில் இருந்த செப்புக்கம்பியை வெட்டித் திருட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. உடனடியாக அவை மீட்கப்பட்டு, காயமடைந்த அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்மைக்காலமாக மின்பிறப்பாக்கிகளில் உள்ள செப்புக்கம்பி வயர்கள் வெட்டப்பட்டு திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


- Srilanka Tamil News



Post a Comment

0 Comments