கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் நடந்த பயங்கரம் - மகளுக்கு நேர்ந்த துயரம்!"
கம்பளையில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஆயுதங்களுடன் மிரட்டி, பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள ஒரு பிரபல மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடை உரிமையாளர் பழனியாண்டி சுப்ரமணியம் என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில், கொள்ளையர்கள் கூரியர் சேவையில் இருந்து வந்ததாக கூறி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், ஆயுதங்களுடன் தொழிலதிபர் மற்றும் அவரது மகளின் கைகளையும் கால்களையும் கட்டி வைத்து, வீட்டில் இருந்த ஒரு கோடி 58 லட்சம் ரூபாய், தங்க நகைகள் மற்றும் கூடுதல் பணத்தையும் பையில் எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் யார்? அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டவர்களா? என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CCTV காட்சிகள், கைரேகைகள் மற்றும் அருகிலுள்ள சாட்சிகள் மூலம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளிநோக்கர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் முன்பு அவசியமான சரிபார்ப்புகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Srilanka Tamil News
0 Comments