போலி இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு! ஒருவர் கைது!!
சீதுவ பகுதியில் போலி இலக்கத் தகடுகளை தயாரிக்கும் ஒரு நிலையம் நேற்று (29) வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது. இந்த நடவடிக்கையில் 56 வயதுடைய ஒருவரை கைது செய்யப்பட்டது.
சோதனையின் போது, போலீசாரால் 3 போலி இலக்கத் தகடுகள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முத்திரை பதித்த ஸ்டிக்கர்கள், தேசிய சின்னம் பொறித்த 67 ஸ்டிக்கர்கள் மற்றும் இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது சட்ட விரோதமாக இலக்கத் தகடுகள் தயாரிக்கும் வலைப்பின்னல்களை முறியடிக்கும் படி முக்கியமான நடவடிக்கையாகும். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தற்போது மேற்கொண்டு வருகின்றது.
இந்தக் கட்டுப்பாட்டுச் செயல்முறை, போலி இலக்கத் தகடுகள் மூலம் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகிறது.
Srilanka Tamil News
0 Comments