Ticker

10/recent/ticker-posts

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி!!

 நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி!!

பொல்துவ சந்தியில், வேலையில்லா பட்டதாரிகள் குழுவினரும் பொலிஸாரும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அந்த பகுதியில் போராட்டங்களை நடத்துவதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தாலும், அந்த உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளனர்.

பொலிஸார் போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற நிலையில், மோதல் உருவாகி, சில யுவதிகள் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக, காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த போராட்டம், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்ததால், அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.

Srilanka Tamil News









Post a Comment

0 Comments