கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்!!
ஹம்பாந்தோட்டை: ஹம்பாந்தோட்டை மாவட்டம், அங்குணுகொலபெலஸ்ஸ் பகுதியில் உள்ள அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்திக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் கொல்லப்பட்ட அந்த இளைஞனின் அடையாளம் அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 23 வயதான சந்தீப லக்ஷன், கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் விசாரணை கூறுகிறது.
இதனையடுத்து, அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள் குற்றச்செயலை உறுதிப்படுத்துவதற்காக அவதானமாக பணி செய்து வருகின்றனர்.
இந்த மர்ம மரணம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Srilanka Tamil News
0 Comments