மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
கொழும்பு: நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அதிகரிப்பு காரணமாக, மின்சாரக் கட்டண மாற்றம் எதிர்வரும் ஜூன் 1ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால இதனை உறுதிப்படுத்தியதோடு, இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், மின்சாரக் கட்டண உயர்வு வானிலை நிலைமைகளைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவித்தார்.
தற்போது நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதால், நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார உற்பத்தி செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் போதிய மழை பெய்தால், நீர் மின் உற்பத்தி மீண்டும் உயர்ந்து, மின்சார உற்பத்தி செலவுகள் குறையலாம். இல்லையெனில், மின்சார கட்டண உயர்வு தடுக்க முடியாது என மின்சார துறையினர் தெரிவித்துள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments