யாழ். சுழிபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஒரு போத்தல் கசிப்பும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கைதான நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். விசாரணைகள் நிறைவு பெற்ற பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், இவ்வாறு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
— Srilanka Tamil News
0 Comments