Ticker

10/recent/ticker-posts

பிரபல பின்னணி பாடகி கல்ப்பனா மருத்துவமனையில் – தற்கொலை முயற்சியென ஆரம்ப விசாரணை!!

 பிரபல பின்னணி பாடகி கல்ப்பனா மருத்துவமனையில் – தற்கொலை முயற்சியென ஆரம்ப விசாரணை!!

சென்னை – பிரபல பின்னணி பாடகி மற்றும் சில திரைப்படங்களில் நடித்தவர் கல்ப்பனா (வயது 44) கடந்த சில நாட்களாக வீடு திறக்காமல் இருந்ததாக தெரிந்து வந்தது. சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, இன்று மாலையில் போலீசார் அவருடைய வீட்டு கதவைத் தட்டினர்.

போலீசார் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த போது, கல்ப்பனா தனது bed room இல் சுய நினைவின்றி மயக்கமான நிலையில் கிடந்தது. உடனடியாக மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவ அறிக்கைகளின்படி, கல்ப்பனாவின் நிலை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதோடு, மருத்துவர்கள் ஆரம்ப விசாரணையில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என முன்னோட்டம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கல்ப்பனா தற்கொலைக்கு முயன்றதா அல்லது வேறு காரணமால்தான் அவரின் வீடு இரண்டுநாட்கள் திறக்காமல் இருந்தது என்பதிலோ சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Srilanka Tamil News



Post a Comment

0 Comments