Ticker

10/recent/ticker-posts

அநுர அரசாங்கத்தின் அமைச்சரை தமிழில் திட்டிய சாமர சம்பத்! சபையில் சலசலப்பு!!

அநுர அரசாங்கத்தின் அமைச்சரை தமிழில் திட்டிய சாமர சம்பத்! சபையில் சலசலப்பு!!

மார்ச் 3, 2025 - கடந்த 18 ஆம் திகதி நடந்த மின்வெட்டு சம்பவம் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி பாராளுமன்றத்தில் பதிலளித்தார். சாமர சம்பத் (Chamara Sampath Dassanayake) எம்.பி, குரங்குகளின் வருகையை சம்பவத்துடன் தொடர்புபடுத்தியுள்ள நிலவரத்தை தொடர்ந்து, மின்சார சபை இந்த விஷயத்தில் குரங்குகளின் சம்பந்தம் இல்லை என்று 18 ஆம் திகதி அறிவித்துள்ளதையும், அது ஒரு தவறான பரப்புரையாக இருந்ததையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் குமார ஜெயக்கொடி சபையில் மேலும் விளக்கமளித்தார். அவர் கூறியபடி, ஞாயிற்றுக்கிழமை அதிகமான மின்னழுத்தம் காரணமாக, நீர்மின் நிலையங்களில் நீர் உற்பத்தி செய்யும் போது, நுரைச்சோலையினுடைய மின்சாரத்தினாலும் மின் உற்பத்தியில் ஏறத்தாழ சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக சூரிய சக்தி மின் உற்பத்தி முறைகளின் செயல்பாட்டின் போது, அழுத்தம் அதிகரித்து மின்வெட்டு ஏற்பட்டதாக அமைச்சர் விளக்கமளித்தார்.


இந்த விளக்கம், சாமர சம்பத்தின் குரங்கு தொடர்பான அறிக்கையை நிராகரித்து, மின்வெட்டின் உண்மையான காரணங்களை பிரகடனப்படுத்தியுள்ளது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments