Ticker

10/recent/ticker-posts

கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடியாக கைது!!

கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடியாக கைது!!

ஒன்டாரியோ மாகாணம், பிக்கரிங் – கனடாவின் பிக்கரிங் நகரில், Mansion Kitchen and Bar இல் கொலைக்கான இலக்கு வைக்கப்பட்டு, அதற்கான சதித்திட்டம் தீட்டியதாக இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதான கோகிலன் பாலமுரளி (மார்க்கம்) மற்றும் 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர் (நோர்த் யோர்க்) ஆகிய இளைஞர்கள், கொலைச் சதிவதற்கான திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றனர். இருவரும் தற்போது முதல்நிலை கொலை குற்றச்சாட்டுக்கு எதிராக கைதானுள்ளனர்.


இந்த இரண்டு நபர்களும், பிக்கரிங் நகரில் Mansion Kitchen and Bar இல் குற்றம் திட்டியதாக கூறப்படுகின்றனர். எனினும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் நீதிமன்றத்தில் நிருபிக்கப்படவில்லை.


இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Srilanka Tamil News 


Post a Comment

0 Comments