நல்லூர் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அர்ச்சுனா - ரஜீவன் நக்கல் நையாண்டி!!
நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியான நக்கல் நையாண்டிகள் செய்ததன் காரணமாக, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பெரும் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த சம்பவம், கூட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் இலக்கு தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கருதினார்கள். "உங்கள் அரசியலையும் நக்கல், நையாண்டிகளையும் இங்க கதைச்சு நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று கோபமாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் பிறகு, கூட்டம் ஓரளவு அரசியல் நையாண்டிகள் இல்லாமல் முன்னேறி, பல முக்கிய விடயங்களை விவாதிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் இந்த மாற்றத்தை வரவேற்று, அடுத்த கட்ட விவாதங்களை பயனுள்ள வழியில் தொடர வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்.
Srilanka Tamil News
0 Comments