மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பாக, 18 வயது மாணவியும், அவரை கர்ப்பமாக்கிய 24 வயது காதலனும் மார்ச் 7ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, அதிகாலை 5 மணியளவில் மலசல கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் குழந்தையை பெற்றெடுத்து, யாரும் அறியாமல் அதனை யன்னல் வழியாக வீசியுள்ளார்.
“குழந்தை, யன்னல் கீழே இருந்த பிளேற்றில் விழுந்து அழுதது. இதைக் கேட்ட தாதியர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.”
இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியும், அவரை கர்ப்பமாக்கிய அவரது காதலனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு நீதிமன்றம் இருவரையும் வரும் மார்ச் 7 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவர்கள் கூறுகையில்,
“குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், சிகிச்சை பெறுகின்றது. தொடர்ந்து கண்காணிப்பு தேவை.”
இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணங்களை பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments