வவுனியாவில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பாேதை பாெருளுடன் ஒருவர் கைது!!
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 1000 போதை மாத்திரைகள் மற்றும் 2200 மில்லிகிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விசாரணை தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:
"இச்சோதனை, இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, குறித்த போதைப்பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த, வவுனியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொலிஸார் தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments