பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை! வெளிவரும் தகவல்கள்!!
மட்டக்களப்பு சந்திவெளியில் 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான ஆயுதக் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த தீர்ப்பு நீதி கிடைக்க வேண்டும் எனக் காத்திருந்த தமிழ் மக்களுக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும், பிள்ளையான் உள்ளிட்ட குழுவினர் இணைந்து அமைத்துள்ள கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, தமிழர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பல்வேறு பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“தமிழர் அரசியல் உரிமைகளை பாதுகாக்க உண்மையான தமிழ் தேசிய சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஆனால், இக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாது, மாறாக அவர்களுக்குள் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தும்” எனவும் சிறிநேசன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
— Srilanka Tamil News
0 Comments