Ticker

10/recent/ticker-posts

யாழில் இருந்து வந்து கனகராயன்குளத்தில் திருட்டு: இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடிப்பு!!

 யாழில் இருந்து வந்து கனகராயன்குளத்தில் திருட்டு: இளைஞர் ஒருவர் மடக்கிப் பிடிப்பு!!

கனகராயன்குளம் பகுதியில் வீடுகளில் திருடியதாக சந்தேகிக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று (15.03.2025) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி மக்களின் சந்தேகத்தின்பேரில், திருட்டில் ஈடுபட்ட குழுவை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, மற்றவர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில், ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். அவரை மக்கள் நையப்புடைத்து கனகராயன்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இந்நிலையில், பொலிஸார் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தப்பிச் சென்றவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார், கைதான இளைஞரை விரைவில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தொடர்பாக உடனடியாக தகவல் வழங்கவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments