யாழில் ஒன்லைன் மூலம் நிதி மோசடி: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் மூலம் நடைபெறும் நிதி மோசடி சமகாலத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. மோசடியாளர்கள் வங்கி கணக்கில் பணம் வைத்துள்ளவர்களின் கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை அவர்களிடம் ஆசை வார்த்தைகளால் பெற்று, பின்னர் அவர்கள் கைபேசியில் இரகசிய இலக்கம் அனுப்பி அதை பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு, அந்த இரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடியாக திரட்டுகின்றனர். இந்நிலையில, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இவ்வாறான வழக்குகள் வழக்கறிஞர்களிடையே பரவலாக நடந்து வருகின்றன.
மேலும், இந்த மோசடிகளுக்கு எதிராக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
மக்கள் தங்களது வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய தகவல்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
— Srilanka Tamil News
0 Comments