நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் : பொலிசார் திகைப்பு!!
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயது இளைஞர் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி-கொழும்பு பிரதான வீதியில், எந்தவித ஆடையுமின்றி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை பல பொலிஸ் அதிகாரிகள் வழிமறிக்க முயன்றனர். ஆனால், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும் அவரை பிடிக்க முடியவில்லை. கேகாலை மற்றும் மாவனெல்லை பொலிஸாரும் அவரைப் பின்தொடர்ந்தபோதும், இறுதியாக கடுகண்ணாவை பொலிஸாரின் வீதித் தடைகளால் அவர் நிறுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தல் & விசாரணை தொடர்ச்சி
அஹங்கம பகுதியைச் சேர்ந்ததாக அடையாளம் காணப்பட்ட இளைஞர், இன்று (3) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவரது மனநல நிலை குறித்து மருத்துவ ஆய்வு மேற்கொள்ளுவதற்காக பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.
இந்த விசாரணை கண்டி பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் தலைமையில் கடுகண்ணாவை பொலிஸாரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
Srilanka Tamil News
0 Comments