Ticker

10/recent/ticker-posts

கொழும்பில் வயதான பெண்ணின் மோசமான செயல் - அதிர்ச்சியில் பொலிஸார்!!

 கொழும்பில் வயதான பெண்ணின் மோசமான செயல் - அதிர்ச்சியில் பொலிஸார்!!

கொழும்பு: கொள்ளுப்பிட்டியில் காணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 83 வயது பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து, 2021ஆம் ஆண்டிலேயே மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்திருந்தது.

நீண்ட விசாரணையின் பின்னர், பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மறைந்திருந்த சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸ் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் காணி மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments