மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் ஒருவர் பலி!!
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் சின்னவத்தை பகுதியில் நண்பர்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (14) சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவர், தனது 3 நண்பர்களுடன் வயல் பகுதியில் மதுபானம் அருந்தியுள்ளார். இதற்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோசமடைந்து, அவரை மற்ற 3 நண்பர்கள் பொல்லால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குப் பின்னர் குறித்த மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், மாலை நேரத்தில் கிராம உத்தியோகத்தர் சடலத்தை கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
நீதிமன்ற அனுமதி பெற்று, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.
விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments