இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு: வவுனியா மாணவன் சாதனை!!
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் கண்டுபிடித்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம், இலங்கையில் முதன்முறையாக ஒரு தேர்தலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
இது இலங்கை தேர்தல் முறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுவதுடன், எதிர்காலத்தில் முழுமையான இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவன் கபிலாசால் உருவாக்கிய இந்த புதிய பொறிமுறை, கடதாசி பயன்பாட்டை குறைத்து, வாக்களிப்பை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதற்கான ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு, தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதுடன், இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் வந்துள்ளது. விரைவில் இந்த தொழில்நுட்பம் பொதுத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்படுமா? என்பது நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் முடிவை பொறுத்தது.
- Srilanka Tamil News
0 Comments