சம்மாந்துறையில் மனிதப் பயன்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் மீட்பு – இருவருக்கும் தண்டனை!!!
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மனிதப் பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற குளிர்பானங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு அவற்றை மீட்டுள்ளனர்.
இதன்போது, அனுமதிக்கப்படாத Tartrazine (INS 102) நிறமூட்டியும், Benzoic acid பாதுகாக்கும் இரசாயனமும் உள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் குளிர்பானங்களை விற்பனை செய்த கடை உரிமையாளரும், அவற்றை உற்பத்தி செய்தவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். விசாரணையின் முடிவில், இருவருக்கும் தலா ரூ. 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டு, கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
சுகாதார அதிகாரிகள் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை வாங்கும் போது, அவற்றின் தரம், காலாவதி தேதி, பாதுகாப்பு முறைகள் போன்றவற்றை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.
தொடர்ந்து விபரங்களைப் பெற www.sltamilnews.com சென்று பார்வையிடுங்கள்!
0 Comments