108 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
சுண்டிகுளம் கடற்கரை பகுதியில் போதைப்பொருள் கடத்த முற்பட்ட சந்தேகநபரொருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (24.04.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 108 கிலோகிராம் கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவுடன், சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
#sltamilnews @Srilanka News Hub
0 Comments