Ticker

10/recent/ticker-posts

2 வயது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்!!

 2 வயது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்!!

திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவில் ராஜபாண்டி- சினேகா தம்பதி வசித்து வருகின்றனர்.

இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ க்கு இரண்டரை வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார்.

அந்த அங்கன்வாடியில், தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி மற்றும் சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் பணியாளராக உள்ளனர்.


தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள்.  

இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கரண்டியால் கழுத்தில் சூடு வைத்ததாக கூறினாள்.

இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.

இதற்கடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி பொலிஸில் இதுகுறித்து புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர். 

#sltamilnews @SrilankaTamilNews



Post a Comment

0 Comments