Ticker

10/recent/ticker-posts

தந்தையை கொலை செய்த 20 வயது மகன்! கொழும்பில் சம்பவம்!!

 தந்தையை கொலை செய்த 20 வயது மகன்! கொழும்பில் சம்பவம்!!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளார். 


மகன் மற்றும் தந்தை ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மகன் இரும்பு கம்பி ஒன்றைக் கொண்டு தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார்.

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தை செய்த அவருடைய 20 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

#sltamilnews @SrilankaTamilNews

Post a Comment

0 Comments