Ticker

10/recent/ticker-posts

முல்லைத்தீவில் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ள வயோதிப தாய்!!

 முல்லைத்தீவில் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ள வயோதிப தாய்!!

முல்லைத்தீவில் 84 வயதான மூதாட்டி ஏழு நாட்களாக காணவில்லை – மக்களின் உதவியை குடும்பத்தினர் வேண்டுகின்றனர்

முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் 84 வயதான சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா என்ற மூதாட்டி கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் காணப்படுகிறார்.


ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாகவே இந்நபரை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மூதாட்டியின் இருப்பிடம் தொடர்பில் எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தினைத் தொடர்புகொள்வதோடு, 0775570692 அல்லது 0770253210 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும், அவரது குடும்பத்தினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

@Srilanka Tamil News #sltamilnews 

Post a Comment

0 Comments