பொலிஸ் பாதுகாப்புடன் ஆசிரியையின் மோசமான செயலால் சர்ச்சை!!
தென்னிலங்கையில் ஆசிரியை ஒருவர் பொலிஸாரின் சேவையை முறைகேடாக பயன்படுத்தினாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக வகுப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியை ஒருவர் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரபலத் தன்மைக்காக இவ்வாறான செயற்பாட்டில் குறித்த ஆசிரியை ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
#sltamilnews @SrilankaTamilNews
0 Comments