மன்னார் உயிலங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு!!
மன்னார், ஏப்ரல் 6:
மன்னார் நகரை அண்மித்த உயிலங்குளம் பிரதேசத்தில் இன்று மாலை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் மூலம் திடீரென ஒரு சேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்பில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெளியில் நடமாட வேண்டாம் என்று பாதுகாப்புத் தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைகள் பொதுமக்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, திடீரென நிலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோதனை மேற்கொள்ளப்பட்ட காரணம், அதன் விளக்கம் மற்றும் மேலதிக தகவல்களின் பற்றாக்குறையினால், இதுவரை எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை.
பொதுமக்களின் பாதுகாப்பு உத்தேசங்களுடன் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிகிறது, ஆனால் அதன் பின்னணி, மற்றும் சோதனையின் காரணம் பற்றி அதிகாரிகள் இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் பாதுகாப்பு நிலை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது.
Srilanka Tamil News
0 Comments