மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவர்!!
பொலநறுவை, ஹிங்குராங்கொட பிரதேசத்தில் கோடரியால் தனது மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கோடாரி தாக்குதலால் பலத்த காயமடைந்த அந்தப் பெண், உள்ளூர்வாசிகளால் சிகிச்சைக்காக பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்ததாகவும், அத்தகைய வாக்குவாதம் தாக்குதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழ்த பெண் தனது வீட்டின் பின் புறத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, கணவன் கோடரியால் தலையில் தாக்கப்பட்டதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 55 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#sltamilnews @SrilankaTamilNews
0 Comments