Ticker

10/recent/ticker-posts

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் - கொலையா, விபத்தா என குழப்பத்தில் பொலிஸார்!!

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் - கொலையா, விபத்தா என குழப்பத்தில் பொலிஸார்!!

புத்தளம், ஆனமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றைய தினம் இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கடந்த 15ஆம் திகதி கடை ஒன்றிற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களால் குறித்த நபர் கடுமையாக தாக்கப்பட்டதால், மரணம் ஏற்பட்டதாக ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கொட்டுகச்சிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் ஆனமடுவ மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது வீதி விபத்தினால் ஏற்பட்ட மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

@SrilankaTamilNews  #sltamilnews 


Post a Comment

0 Comments