Ticker

10/recent/ticker-posts

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை!!

 வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை!!

அனுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நொச்சியாகம பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்பட்டது.


கொலை செய்யப்பட்ட தந்தைக்கு 59 வயது, மகனுக்கு 26 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நடந்த இந்த கொலைகள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்

2022 ஆம் ஆண்டு சந்தேக நபர்களின் தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக அதிகாலையில் தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

#sltamilnews @SrilankaTamilNews

Post a Comment

0 Comments