மொனராகலையில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!!
மொனராகலை -ரணவராவ சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கொலை செய்யப்பட்டவர் வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
முன்விரோதம் காரணமாக இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்படி நபரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments