Ticker

10/recent/ticker-posts

ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!!

 ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!!

அம்பாறை (Ampara) இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று (15) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சம்பவதினமான நேற்று சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர்.


இதன்போது வியாபாரத்துக்காக கொண்டுவந்த 810 கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் 32 வயதுடைய வியாபாரியை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில. சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Srilanka Tamil News

Post a Comment

0 Comments