கர்ப்பிணி பெண் மற்றும் தாயாருடன் கடத்தப்பட்ட கார்! நடந்தது என்ன...!!
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் வைத்து குறித்த கார் கடத்திச்செல்லப்பட்ட நிலையில் அதனை தடுக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில் தனது காரை நிறுத்திவிட்டு, உணவு வாங்குவதற்காக உணவகத்திற்குள் காரின் உரிமையாளர் சென்றுள்ளார்.
காரில் கர்ப்பிணியான மனைவியையும் தயாரையும் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ஒரு சந்தேக நபர் காரில் ஏறி, இரண்டு பெண்களையும் உள்ளேயே வைத்துக்கொண்டு காரை கடத்தி தப்பிச் சென்றுள்ளார்.
#sltamilnews @SrilankaTamilNews
0 Comments