Ticker

10/recent/ticker-posts

இளம் தாயின் கொடூரமான செயல் - மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்!!

இளம் தாயின் கொடூரமான செயல் - மரத்தில் சடலங்களாக தொங்கிய உடல்கள்!!

கம்பஹா மாவட்டம் வரக்காபொல பகுதியில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்றில், இளம் தாய் ஒருவர் தனது ஆறு மாத குழந்தையை கொன்றதுடன், பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் 37 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் சோமிகானி நிலுஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பணியாற்றி வந்தவர் என்றும், பட்டதாரி ஆவார் என்றும் தெரிய வந்துள்ளது.

கடன் நெருக்கடி காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், இந்த முடிவிற்கு வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்கு முன், தாயார் தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் உயிரை மாய்க்கவுள்ளதாக கணவனுக்கு எச்சரிக்கை அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதையடுத்து, கணவர் தனது மற்ற இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனது தாயின் வீட்டிற்கு சென்ற நிலையில், வீடு திரும்பிய போது மனைவி மற்றும் ஆறு மாத குழந்தையின் சடலங்களை மரத்தில் தூக்கில் தொங்கும் நிலையில் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் தற்போது விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News

Post a Comment

0 Comments