Ticker

10/recent/ticker-posts

சிறைச்சாலை காவலர் இல்ல மதுவிருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் உயிரிழப்பு!!

 சிறைச்சாலை காவலர் இல்ல மதுவிருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் உயிரிழப்பு!!

மஹர சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மதுபான விருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பை அண்மித்த முல்லேரியா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.


குறித்த சிறைச்சாலைக் காவலர் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர், இன்னுமொரு நபர் ஆகியோர் மட்டுமே குறித்த மதுபான விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அங்கொடை லொக்கா என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலகப் புள்ளியின் சகாவான சுமேத எனும் நபர் உயிரிழந்துள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அண்மையில் தான் விளக்கமறியலில் இருந்து வௌிவந்திருந்தார்.

குறித்த மதுபான விருந்தில் கலந்து கொண்ட சுமேத உயிரிழந்த நிலையில், அதனை ஏற்பாடு செய்த சிறைச்சாலைக் காவலர் மற்றும் இன்னொரு நபர் ஆகியோர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#sltamilnews @Srilanka Tamil News 

Post a Comment

0 Comments