ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கையின் பெரிய நீர்வழிப் போக்குவரத்துப்பாதை!!
இன்று (04) காலை, குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பகுதிகளில் புதிய இயந்திர பாதை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய சேவைகள், அதற்கான 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு புதிய இயந்திரப்பாதைகளின் கொள்வனவினை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய சேவைகள் தொடங்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இந்தப் பாதைகளை பயன்படுத்தி பயணம் செய்ய முடிகின்றது.
0 Comments