Ticker

10/recent/ticker-posts

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!!

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – ஐந்து சந்திப் பகுதியில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, 18 வயதுடைய இளைஞர் ஒருவர் 10 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை சோதனை செய்தபோது, அவரது உடமையில் இருந்து போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் சந்தேக நபரின் வீட்டில் நடத்திய சோதனையின் போது கூடுதல் 75 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments