Ticker

10/recent/ticker-posts

கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி!!

 கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் ரக வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது.


இச்சம்பவம் நேற்று (18.04.2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண்குழந்தை உயிரிழந்துள்ளது.


சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான், உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

@SrilankaTamilNews  #sltamilnews

Post a Comment

0 Comments